இடுகைகள்

பெருவலிப் பாதை

படம்
கழுதைப்பாதை ( நாவல் ) ஆசிரியர் – எஸ். செந்தில்குமார் வெளியீடு – எழுத்து விலை - 375 ‘கழுதைகள் இப்படித்தான் நாடாளுமன்றத்தில் இடம் பிடித்தன’ புலம் பெயர் ஈழ எழுத்தாளர் எழுதிய சிறுகதை ஒன்று உயிர் எழுத்து இதழில் வெளியாகியிருந்தது. அக்கதையை எழுதிய ஆசிரியர் பெயர் அதில் இடம் பெற்றிருக்கவில்லை. காரணம், கதையின் தலைப்பு மட்டுமல்ல, கதையும் அப்படி. பிஸ்மார்க் இவ்வாறு ஜெர்மனி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். ‘இங்கே கூடியிருப்பவர்களில் பாதி பேர் கழுதைக்கு சமமானவர்கள்’ என்று. உரைக்கு எதிர்ப்பு கிளம்பியது. பிஸ்மார்க் உரையை இவ்வாறு திரும்பப்பெற்றுக்கொண்டார், ‘ இங்கே கூடியிருப்பவர்களில் பாதிபேர் கழுதைக்குச் சமமல்ல’. உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்த வசனம் சமீபத்தில் சர்க்கார் திரைப்படத்தில் இடம்பெற்றது. அறிவுசார் மட்டத்தில் கழுதைக்கென ஓரிடமிருக்கிறது. எள்ளல், பேதமை,மடன் இவற்றின் குறியீடு கழுதை. உழைப்பைக் கொண்டு அறிவைப் பார்க்கும் இச்சமூகத்தில், அறிவால் உழைப்பைப் பார்ப்பதில்லை. அப்படியாகப் பார்ப்பவர்களுக்கே தெரியும் உழைப்பின் குறியீடு கழுதை என்று. தன்னை விடவும் பல மடங்கு எடையைச் சுமக்கக...

கலங்கிய நதியும் கலங்கா நொதியும்

படம்
கலங்கிய நதி - நாவல் மீதான விமர்சனப் பார்வை கற்பனை -1 தேச பிரதமர் - தீவிரவாதி, நக்சலைடு அல்லது அவரது கட்சிக்காரர்களால் கடத்தப்படுகிறார் என வைத்துக்கொள்வோம். என்ன நடக்கும்...?. பிரதமர் நாற்காலியில் மற்றொரு பிரதமர் உட்காரும் வரை தேடுதல் பணி கிஞ்சிற்றும் தொடங்கியிருக்காது. புதியப் பிரதமர் நாற்காலியில் அமர்ந்ததன் பிறகு காணாமல் போனவர் திரும்பி வந்தால், அவரது பதவி என்னாகுமென்று கணிப்பின் அடிப்படையிலேயே அவர் தேடுதல் பணியை முடுக்குவார். அதற்குள்ளாக, ஒரு சராசரி குடிமகன் இந்த உலகை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருப்பான். கற்பனை - 2 மத்திய அரசு நிறுவனத்தின் கீழ் உயர்ப்பதவியில் வீற்றிருக்கும் நான் திடீரெனக் கடத்தப்படுகிறேன். என்ன நடக்கும்...? தேடுதல் பணியைத் தொடங்குவதற்கு முன்பாக என்  காலி பணியிடத்திற்காக ஒருவரைத் தேர்வு செய்யும் படலம் நடந்தேறும். என்னை ஆள் வைத்து கடத்தியவர் என் இருக்கையில் வந்தமர்ந்திருப்பார். அவர் பதவி ஓய்வுப் பெற்றதற்குப் பிறகே நான் உயிராகவோ, பிணமாகவோ மீட்கப் பட்டிருப்பேன். சமீபத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின்  ஆதாரங்களை வெளியிட்ட முகிலன் காணாமல் போ...

வரைவு தேசிய கல்விக் கொள்கை - 2019 மீதான ஒரு பார்வை

படம்
வளரும் இந்தியா, சக்தி இந்தியா, வல்லரசு இந்தியா.. டிஜிட்டல் இந்தியா என்பது இன்றைய இந்தியாவின் அடையாளங்களாக இருக்கின்றன. கல்விக்காக, மேற்படிப்பிற்காக இந்தியாவிலிருந்து மேனாடு செல்லும் காலம் போய் கல்விக்காக இந்தியாவிற்குள் கால் பதிக்கும் நிலையை நோக்கி இந்தியா முன்னேறியுள்ளதாக புதிய கல்விக் கொள்கையை வரையறுத்திற்கும் கல்வியாளர்கள் கருதியிருக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே புதிய தேசிய கல்விக் கொள்கையின் கலைத்திட்டமும் கொள்கை முடிவும் இருப்பதை முன்வரைவாக வைத்திருக்கும் இயல்களைப் பார்க்கையில் கருத வேண்டியதாக இருக்கிறது. NEP-2019 மொத்தமுள்ள பதினெட்டு இயலில் இயல் -நான்கிலுள்ள பள்ளிக் கலைத்திட்டமும் ஆசிரியமும் என்கிற பகுதி மாணவர்களின் வயது, நரம்பு, மூளை, உணர்வு, உளவியலுடன் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. இந்த இயலை பெற்றோர் வரைக்குமாகக் கொண்டுச் சென்று விவாதித்தல், விவாதத்தின் அடிப்படையில் சில வரைவுகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை விருப்பு வெறுப்பின்றி ஏற்றல், எதிர்கால தலைமுறையைக் கருத்தில் கொண்டு திருத்தம் செய்தல் மூன்றும் வல்லரசு இந்தியாவை விடவும் நல்லரசு இந்தியாவை உருவாக்க வழிகோலும். ஒலி...

மீரானும் காலத்தின் ஆவர்த்தனமும்

படம்
பதினாங்கு வயதுடைய ஒரு பெண்ணின் சடலம். முழு நிர்வாணமாக மல்லாந்து கிடக்கிறது. மேல்நோக்கி நிற்கும் சிறு குசங்களில் பற்கள் பதிந்த வடுக்கள். இழுத்துக் கிழித்த ஜம்பர் பாடி - இரு பக்கமாக விரிந்த கைகள். தொடையில் காய்ந்து ஒட்டிய இரத்தம்...        யார்...?        மௌனம்.        எப்படி அடையாளம் சொல்ல முடியும்?எதை அடையாளம் கண்டு சொல்ல முடியும்? துறையில் உள்ளதா? மேகரையில் உள்ளதா?... .                 என்பதாகத் துவங்கும் கூனம் தோப்பு நாவல் தொடக்கத்திலேயே பேசும் பொருளையும், எது குறித்த நாவல் என்பதையும் நேர்படச் சொல்லி வாசகர்களை நாவலுக்குள் பயணிக்க வைத்தவர் எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள்.          ஒரு திரைப்படக் கலைஞன் மரணிக்கையில் அவரது ரசிகர்கள் அவரது திரைப்படத்தைப் பார்த்து தன் அஞ்சலியைச் செலுத்துபவதைப்போல, ஓர் அரசியல்வாதி இறந்துபோகையில் அவரது அரசியல் சுவடுகளை நினைவு கூர்ந்து அசை...