மீரானும் காலத்தின் ஆவர்த்தனமும்
பதினாங்கு வயதுடைய ஒரு பெண்ணின் சடலம். முழு நிர்வாணமாக மல்லாந்து கிடக்கிறது. மேல்நோக்கி நிற்கும் சிறு குசங்களில் பற்கள் பதிந்த வடுக்கள். இழுத்துக் கிழித்த ஜம்பர் பாடி - இரு பக்கமாக விரிந்த கைகள். தொடையில் காய்ந்து ஒட்டிய இரத்தம்... யார்...? மௌனம். எப்படி அடையாளம் சொல்ல முடியும்?எதை அடையாளம் கண்டு சொல்ல முடியும்? துறையில் உள்ளதா? மேகரையில் உள்ளதா?... . என்பதாகத் துவங்கும் கூனம் தோப்பு நாவல் தொடக்கத்திலேயே பேசும் பொருளையும், எது குறித்த நாவல் என்பதையும் நேர்படச் சொல்லி வாசகர்களை நாவலுக்குள் பயணிக்க வைத்தவர் எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள். ஒரு திரைப்படக் கலைஞன் மரணிக்கையில் அவரது ரசிகர்கள் அவரது திரைப்படத்தைப் பார்த்து தன் அஞ்சலியைச் செலுத்துபவதைப்போல, ஓர் அரசியல்வாதி இறந்துபோகையில் அவரது அரசியல் சுவடுகளை நினைவு கூர்ந்து அசை...