இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் ஷேக்ஸ்பியர்

படம்
  தமிழ் ஷேக்ஸ்பியர் சுந்தரம் பிள்ளை கேரளத்தில் பிறந்தவர். அன்றைய திருவிதாங்கூரின் முக்கிய துறைமுகப் பட்டினமான ஆலப்புழையில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் பெருமாள் பிள்ளை - மாடத்தி அம்மாள். தந்தையார் துணி வியாபாரம் செய்துவந்தார். ஆலப்புழையில் தமிழ்ப் பள்ளியில் படித்த சுந்தரம் பிள்ளைக்கு திருவிதாங்கூர் சமஸ்தான அரசு மாதம் எட்டு ரூபாய் கல்வி உதவித்தொகை கொடுத்து ஊக்குவித்தது. இந்த உதவித்தொகை இவருக்கு இளங்கலை பட்டம் பெறும் காலம் வரைக்கும் கொடுக்கப்பட்டது. திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் முதல் மாணவராகவும் அன்றைய சென்னை மாகாணத்தில் நான்காவது மாணவராகவும் இளங்கலையில் தேறினார். சுந்தரம் பிள்ளை தாய்மொழியான தமிழுடன் ஆங்கிலம்,  சமஸ்கிருதம் மற்றும் மலையாளத்தில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார். தத்துவம், சமயம், வரலாறு இவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.  அன்றைய திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியின் முதல்வராக இருந்த ரோஸ் அவர்கள் அக்கல்லூரியிலேயே வரலாறு, தத்துவ இயல் கற்பிக்கும் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். பிறகு திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். தத்...

தெக்கணமும் அதிற்சிறந்த @அண்டனூர் சுரா

படம்
“ நான் பாடினால் என் மன்னன் எழுந்து நிற்பார்”. “எங்கே பாடும் பார்க்கலாம்” புலவர் பாடுகிறார், “ஜன கண மன...” மன்னன் எழுந்து நிற்கிறார். ஒரு பள்ளி ஆண்டு விழாவில் நடைப்பெற்ற மேடை நாடகம் இது. தேசிய கீதத்திற்குக் கிடைக்கும் இந்த மரியாதை தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் பல மேடைகளில் கிடைப்பதில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து எப்பொழுதெல்லாம் புறக்கணிப்புக்கும் அவமதிப்புக்கும் உள்ளாகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டில் இனவாத அரசியல் எழுவதைத் தவிர்க்கமுடிவதில்லை. ஒரு அரசு விழாவில் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிப்பேழையில் ஒலிக்கவிடப்பட்டு பாடல் பாதியில் நின்றுவிட்டது. பிற்பகுதியை அமைச்சர்கள், அதிகாரிகள் பாடி முடிக்க வேண்டும். அவர்களுக்குப் பாடத் தெரியவில்லை. தவறும் பிழையுமாக பாடி அதை முடித்து வைத்தார்கள். இங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பிற்கு உள்ளானது. ஆனால் இங்கு இனவாத அரசியல் எழுந்ததா என்றால் இல்லை.  காரணம் இந்த அவமதிப்பு நம்மவர்களால் நிகழ்ந்தது. ஒரு முறை மத்திய அரசுடன் நெருக்கமான உறவுகொண்டிருந்த ஒருவர் தமிழ்நாட்ட...

எனது நூல்களும் சமர்ப்பணமும்

படம்
  தி இந்து தமிழ்த்திசை இதழில் பழ. அதியமான் "சமர்ப்பணமும் நன்றியும்" எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் சமர்ப்பணம் என்பது மேற்கின் கொடை என்றும் ஆங்கிலேயர்கள் யாருக்கும் நூலைச் சமர்ப்பணம் செய்தால் அவர்களிடம் அனுமதியும் இசைவும் பெற்றே பதிவுசெய்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் சமர்ப்பணம் என்பதற்கு காணிக்கை, படையல், நேர்ந்தளித்தல்,  அர்ப்பணம்,  உரிமையுரை ஆகிய சொற்களைப் பயன்படுத்தியிருந்தார். இதை வாசித்த பொழுது நான் எனது நூல்களை யாருக்கெல்லாம் சமர்ப்பணம் செய்திருக்கிறேன் என்று அசைபோட்டு பார்க்கத் தோன்றியது சிறுகதைத் தொகுப்புகள் 1. மழைக்குப் பிறகான பொழுது தாய்வழி தாத்தா தெய்வத்திரு.  சடையப்பன் அவர்களுக்கு 2. திற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களுக்கு 3. ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை வாச்சாத்தி என்கிற பெயர்ச்சொல்லை வினைச் சொல்லாக மாற்றியவர்களுக்கு 3. பிராண நிறக் கனவு நடுநிசி அவள் கூடாத கனவைக் கண்டவளாய் திடுக்கென விழித்துக் குடிசைக்கு வெளியே ஓடிவந்தாள். அவளுக்குத் திசை தெரியவில்லை. இடம், வலம், மேல், கீழ் புரியவில்லை. எந்த இடத்தில் ...

கரீடாரமன் மீது பூப்பந்தை வீசிய ரசிகா(காதலர் தினக் கட்டுரை)

படம்
பாரதி பயன்படுத்திய உவமைகளில் பெரியது காதலை எழுத அவர் பயன்படுத்திய உவமை. காதல் கவிதைகளை மூன்று வகைப்படுத்தலாம். அரும்பு கால கவிதைகள், பருவக் கால கவிதைகள், பிரிவு காலக் கவிதைகள். பிரிவு காதல் கவிதைக்கு மென்உணர்வுகள் அதிகம். உணர்வு மென்மையாக இருக்கையில் கற்பனை எனும் செடி நன்றாகச் செழித்து பூக்கும். 1910 முதல் 1913 ஆம் ஆண்டு வரையிலான காலம் பாரதியார் தன் படைப்புகளில் உச்சம் தொட்ட காலம் எனலாம். பாரதியின் சுயசரிதம் என்று சொல்லக்கூடிய ஞானரதம் இந்தக் காலக்கட்டத்தில் எழுதப்பட்டது.   பாரதி ஏழ்மையில் வாழ்ந்த காலமது. இந்தக் காலத்தின் பாரதியின் சிறு துளி வாழ்க்கைதான் ஞானரதம். இந்நூலின்   முகவுரையில் இவ்வாறு எழுதுகிறார் பாரதி:   "இந்நூலை   நானாக எழுதவில்லை. எல்லா நடத்தும் பரமாத்மா ஞான தீரமில்லாத ஏழையேனைக் கொண்டு ஞான ரதத்தில்   ஏற்றினான்."   மேலும் இப்படைப்பில் பாரதிக்கு இயலாமை காலத்தில் உதவிய அவரது நண்பர் மஹேசகுமார சர்மாவுக்கு நன்றியையும் அன்பையும் தெரிவிக்கிறார்.        ஞான ரதம் கதை இதுதான்: பின் மாலைப்பொழுதில் திருவல்லிக்கேணி வீரராகவ ...