எனது நூல்களும் சமர்ப்பணமும்
தி இந்து தமிழ்த்திசை இதழில் பழ. அதியமான் "சமர்ப்பணமும் நன்றியும்" எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் சமர்ப்பணம் என்பது மேற்கின் கொடை என்றும் ஆங்கிலேயர்கள் யாருக்கும் நூலைச் சமர்ப்பணம் செய்தால் அவர்களிடம் அனுமதியும் இசைவும் பெற்றே பதிவுசெய்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் சமர்ப்பணம் என்பதற்கு காணிக்கை, படையல், நேர்ந்தளித்தல், அர்ப்பணம், உரிமையுரை ஆகிய சொற்களைப் பயன்படுத்தியிருந்தார். இதை வாசித்த பொழுது நான் எனது நூல்களை யாருக்கெல்லாம் சமர்ப்பணம் செய்திருக்கிறேன் என்று அசைபோட்டு பார்க்கத் தோன்றியது சிறுகதைத் தொகுப்புகள் 1. மழைக்குப் பிறகான பொழுது தாய்வழி தாத்தா தெய்வத்திரு. சடையப்பன் அவர்களுக்கு 2. திற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களுக்கு 3. ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை வாச்சாத்தி என்கிற பெயர்ச்சொல்லை வினைச் சொல்லாக மாற்றியவர்களுக்கு 3. பிராண நிறக் கனவு நடுநிசி அவள் கூடாத கனவைக் கண்டவளாய் திடுக்கென விழித்துக் குடிசைக்கு வெளியே ஓடிவந்தாள். அவளுக்குத் திசை தெரியவில்லை. இடம், வலம், மேல், கீழ் புரியவில்லை. எந்த இடத்தில் ...