இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெருவலிப் பாதை

படம்
கழுதைப்பாதை ( நாவல் ) ஆசிரியர் – எஸ். செந்தில்குமார் வெளியீடு – எழுத்து விலை - 375 ‘கழுதைகள் இப்படித்தான் நாடாளுமன்றத்தில் இடம் பிடித்தன’ புலம் பெயர் ஈழ எழுத்தாளர் எழுதிய சிறுகதை ஒன்று உயிர் எழுத்து இதழில் வெளியாகியிருந்தது. அக்கதையை எழுதிய ஆசிரியர் பெயர் அதில் இடம் பெற்றிருக்கவில்லை. காரணம், கதையின் தலைப்பு மட்டுமல்ல, கதையும் அப்படி. பிஸ்மார்க் இவ்வாறு ஜெர்மனி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். ‘இங்கே கூடியிருப்பவர்களில் பாதி பேர் கழுதைக்கு சமமானவர்கள்’ என்று. உரைக்கு எதிர்ப்பு கிளம்பியது. பிஸ்மார்க் உரையை இவ்வாறு திரும்பப்பெற்றுக்கொண்டார், ‘ இங்கே கூடியிருப்பவர்களில் பாதிபேர் கழுதைக்குச் சமமல்ல’. உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்த வசனம் சமீபத்தில் சர்க்கார் திரைப்படத்தில் இடம்பெற்றது. அறிவுசார் மட்டத்தில் கழுதைக்கென ஓரிடமிருக்கிறது. எள்ளல், பேதமை,மடன் இவற்றின் குறியீடு கழுதை. உழைப்பைக் கொண்டு அறிவைப் பார்க்கும் இச்சமூகத்தில், அறிவால் உழைப்பைப் பார்ப்பதில்லை. அப்படியாகப் பார்ப்பவர்களுக்கே தெரியும் உழைப்பின் குறியீடு கழுதை என்று. தன்னை விடவும் பல மடங்கு எடையைச் சுமக்கக...