இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெரிய பெரிய ஆயுதங்கள்

படம்
           ‘ என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?’ உறக்கம் கலைந்து எழுந்தவன் கேட்டான். அவனைக் கைது செய்த காவலர்கள் சொன்னார்கள், ‘ அடேய் கனவு காண்கிறாயடா?’ ரஷ்ய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் புஷ்கின் தன் கதையில் ஓரிடத்தில் இப்படியாக எழுதிச் செல்கிறார். கனவுக்குத் தடையா? ஆம், இப்படியான தடை இந்தியாவில் நடந்தேறியது! மகாகவி பாரதி எழுதிய ‘கனவு’ என்கிற நூலுக்கு ஆங்கிலேயர்கள் தடைவிதித்தார்கள். இந்நூலுடன் சேர்த்து தடை விதிக்கப்பட்ட மற்றொரு நூல், ‘ஆறில் ஒரு பங்கு’. தடை விதிக்கப்பட்ட நாள், 1911 அக்டோபர் 11.   பாரதிக்கும் பிந்தைய ஆண்டில், ‘பாரதி’ பெயரைத் தாங்கி வந்த வங்காளப் புதினம் ஆங்கிலேய அரசினால் தடைக்கு உள்ளானது. அப்புதினத்தை எழுதியவர் சரத்சந்திர சாட்டர்ஜி என அழைக்கப்பட்ட சரத்சந்திர சடக்கோபாத்யா. இவர் எழுதி தடைக்கு உள்ளான மற்றொரு நூல் ‘பதேர் தாபி’. ‘நம் வீழ்ச்சிக்குக் காரணங்கள் நம்மிடையேயுள்ள சாதிப் பிரிவுகள், சமூகக் கொடுமைகள், அன்பில்லாத மதம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், பெண்ணடிமைத்தனம்’ இத்தனையும் ஒருங்கே பேசும் புதினம் இது. 1926 ஆம் ஆண்டு இப்புதினம் வெளியாகி முதல் ...