இடுகைகள்

புகழுக்காகவா எழுதுகி றேன் ? @அண்டனூர் சுரா நானும் அவரும் ஒரு காலக்கட்டத்தில் எழுதத் தொடங்கினோம். அவர் இரண்டு நூல்களோடு எழுதுவதை நிறுத்திக்கொண்டார். மொழி அடர்த்தியாக எழுதக்கூடியவர். சமீபத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு நேரிட்டது.  அவரிடம் கேட்டேன், "அன்பரே, நன்றாகத்தானே எழுதிக்கொண்டிருந்தீர்கள். நீங்கள் எழுதிய   நூல்களின் மூலமாக  அறியப்பட்டீர்கள். ஏன் எழுதுவதை நிறுத்திக்கொண்டீர்கள்?” அவர்  அமைதியாக இருந்துவிட்டு  சொன்னார். "நிறுத்திவிட்டேன். நீங்கள் தொடர்ந்து எழுதுகிறீர்கள். புகழுக்காக எழுதுகிறீர்கள் " என்றார். அவரது பதில் எனக்கு வியப்பளித்தது. "ஓர் எழுத்தாளன் எழுதுவது புகழுக்காகவா? புகழ் என்ன கிரீடமா, இல்லை உயிரைக் காக்கும் கவசமா?" அவரிடம் கேட்டேன்.  அவர் முகத்தை எங்கேயோ வைத்துக்கொண்டு, "ஆமாம், பிறகு எதற்கு நீங்கள் எழுதுகிறீர்கள்?" என்று கேட்டார். நான் ஏன் எழுதுகிறேன் என்பதை விடவும் புகழின் ஆபத்து குறித்து அவருக்குப் புரியவைக்க நினைத்தேன். "புகழ் கழுதைப்புலிக்கு ஒப்பானது தெரியுமா?" கேட்டேன். "எப்படி?"  என்றார். "திருவிவி...

தமிழ் ஷேக்ஸ்பியர்

படம்
  தமிழ் ஷேக்ஸ்பியர் சுந்தரம் பிள்ளை கேரளத்தில் பிறந்தவர். அன்றைய திருவிதாங்கூரின் முக்கிய துறைமுகப் பட்டினமான ஆலப்புழையில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் பெருமாள் பிள்ளை - மாடத்தி அம்மாள். தந்தையார் துணி வியாபாரம் செய்துவந்தார். ஆலப்புழையில் தமிழ்ப் பள்ளியில் படித்த சுந்தரம் பிள்ளைக்கு திருவிதாங்கூர் சமஸ்தான அரசு மாதம் எட்டு ரூபாய் கல்வி உதவித்தொகை கொடுத்து ஊக்குவித்தது. இந்த உதவித்தொகை இவருக்கு இளங்கலை பட்டம் பெறும் காலம் வரைக்கும் கொடுக்கப்பட்டது. திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் முதல் மாணவராகவும் அன்றைய சென்னை மாகாணத்தில் நான்காவது மாணவராகவும் இளங்கலையில் தேறினார். சுந்தரம் பிள்ளை தாய்மொழியான தமிழுடன் ஆங்கிலம்,  சமஸ்கிருதம் மற்றும் மலையாளத்தில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார். தத்துவம், சமயம், வரலாறு இவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.  அன்றைய திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியின் முதல்வராக இருந்த ரோஸ் அவர்கள் அக்கல்லூரியிலேயே வரலாறு, தத்துவ இயல் கற்பிக்கும் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். பிறகு திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். தத்...

தெக்கணமும் அதிற்சிறந்த @அண்டனூர் சுரா

படம்
“ நான் பாடினால் என் மன்னன் எழுந்து நிற்பார்”. “எங்கே பாடும் பார்க்கலாம்” புலவர் பாடுகிறார், “ஜன கண மன...” மன்னன் எழுந்து நிற்கிறார். ஒரு பள்ளி ஆண்டு விழாவில் நடைப்பெற்ற மேடை நாடகம் இது. தேசிய கீதத்திற்குக் கிடைக்கும் இந்த மரியாதை தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் பல மேடைகளில் கிடைப்பதில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து எப்பொழுதெல்லாம் புறக்கணிப்புக்கும் அவமதிப்புக்கும் உள்ளாகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டில் இனவாத அரசியல் எழுவதைத் தவிர்க்கமுடிவதில்லை. ஒரு அரசு விழாவில் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிப்பேழையில் ஒலிக்கவிடப்பட்டு பாடல் பாதியில் நின்றுவிட்டது. பிற்பகுதியை அமைச்சர்கள், அதிகாரிகள் பாடி முடிக்க வேண்டும். அவர்களுக்குப் பாடத் தெரியவில்லை. தவறும் பிழையுமாக பாடி அதை முடித்து வைத்தார்கள். இங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பிற்கு உள்ளானது. ஆனால் இங்கு இனவாத அரசியல் எழுந்ததா என்றால் இல்லை.  காரணம் இந்த அவமதிப்பு நம்மவர்களால் நிகழ்ந்தது. ஒரு முறை மத்திய அரசுடன் நெருக்கமான உறவுகொண்டிருந்த ஒருவர் தமிழ்நாட்ட...

எனது நூல்களும் சமர்ப்பணமும்

படம்
  தி இந்து தமிழ்த்திசை இதழில் பழ. அதியமான் "சமர்ப்பணமும் நன்றியும்" எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் சமர்ப்பணம் என்பது மேற்கின் கொடை என்றும் ஆங்கிலேயர்கள் யாருக்கும் நூலைச் சமர்ப்பணம் செய்தால் அவர்களிடம் அனுமதியும் இசைவும் பெற்றே பதிவுசெய்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் சமர்ப்பணம் என்பதற்கு காணிக்கை, படையல், நேர்ந்தளித்தல்,  அர்ப்பணம்,  உரிமையுரை ஆகிய சொற்களைப் பயன்படுத்தியிருந்தார். இதை வாசித்த பொழுது நான் எனது நூல்களை யாருக்கெல்லாம் சமர்ப்பணம் செய்திருக்கிறேன் என்று அசைபோட்டு பார்க்கத் தோன்றியது சிறுகதைத் தொகுப்புகள் 1. மழைக்குப் பிறகான பொழுது தாய்வழி தாத்தா தெய்வத்திரு.  சடையப்பன் அவர்களுக்கு 2. திற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களுக்கு 3. ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை வாச்சாத்தி என்கிற பெயர்ச்சொல்லை வினைச் சொல்லாக மாற்றியவர்களுக்கு 3. பிராண நிறக் கனவு நடுநிசி அவள் கூடாத கனவைக் கண்டவளாய் திடுக்கென விழித்துக் குடிசைக்கு வெளியே ஓடிவந்தாள். அவளுக்குத் திசை தெரியவில்லை. இடம், வலம், மேல், கீழ் புரியவில்லை. எந்த இடத்தில் ...

கரீடாரமன் மீது பூப்பந்தை வீசிய ரசிகா(காதலர் தினக் கட்டுரை)

படம்
பாரதி பயன்படுத்திய உவமைகளில் பெரியது காதலை எழுத அவர் பயன்படுத்திய உவமை. காதல் கவிதைகளை மூன்று வகைப்படுத்தலாம். அரும்பு கால கவிதைகள், பருவக் கால கவிதைகள், பிரிவு காலக் கவிதைகள். பிரிவு காதல் கவிதைக்கு மென்உணர்வுகள் அதிகம். உணர்வு மென்மையாக இருக்கையில் கற்பனை எனும் செடி நன்றாகச் செழித்து பூக்கும். 1910 முதல் 1913 ஆம் ஆண்டு வரையிலான காலம் பாரதியார் தன் படைப்புகளில் உச்சம் தொட்ட காலம் எனலாம். பாரதியின் சுயசரிதம் என்று சொல்லக்கூடிய ஞானரதம் இந்தக் காலக்கட்டத்தில் எழுதப்பட்டது.   பாரதி ஏழ்மையில் வாழ்ந்த காலமது. இந்தக் காலத்தின் பாரதியின் சிறு துளி வாழ்க்கைதான் ஞானரதம். இந்நூலின்   முகவுரையில் இவ்வாறு எழுதுகிறார் பாரதி:   "இந்நூலை   நானாக எழுதவில்லை. எல்லா நடத்தும் பரமாத்மா ஞான தீரமில்லாத ஏழையேனைக் கொண்டு ஞான ரதத்தில்   ஏற்றினான்."   மேலும் இப்படைப்பில் பாரதிக்கு இயலாமை காலத்தில் உதவிய அவரது நண்பர் மஹேசகுமார சர்மாவுக்கு நன்றியையும் அன்பையும் தெரிவிக்கிறார்.        ஞான ரதம் கதை இதுதான்: பின் மாலைப்பொழுதில் திருவல்லிக்கேணி வீரராகவ ...

பெரிய பெரிய ஆயுதங்கள்

படம்
           ‘ என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?’ உறக்கம் கலைந்து எழுந்தவன் கேட்டான். அவனைக் கைது செய்த காவலர்கள் சொன்னார்கள், ‘ அடேய் கனவு காண்கிறாயடா?’ ரஷ்ய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் புஷ்கின் தன் கதையில் ஓரிடத்தில் இப்படியாக எழுதிச் செல்கிறார். கனவுக்குத் தடையா? ஆம், இப்படியான தடை இந்தியாவில் நடந்தேறியது! மகாகவி பாரதி எழுதிய ‘கனவு’ என்கிற நூலுக்கு ஆங்கிலேயர்கள் தடைவிதித்தார்கள். இந்நூலுடன் சேர்த்து தடை விதிக்கப்பட்ட மற்றொரு நூல், ‘ஆறில் ஒரு பங்கு’. தடை விதிக்கப்பட்ட நாள், 1911 அக்டோபர் 11.   பாரதிக்கும் பிந்தைய ஆண்டில், ‘பாரதி’ பெயரைத் தாங்கி வந்த வங்காளப் புதினம் ஆங்கிலேய அரசினால் தடைக்கு உள்ளானது. அப்புதினத்தை எழுதியவர் சரத்சந்திர சாட்டர்ஜி என அழைக்கப்பட்ட சரத்சந்திர சடக்கோபாத்யா. இவர் எழுதி தடைக்கு உள்ளான மற்றொரு நூல் ‘பதேர் தாபி’. ‘நம் வீழ்ச்சிக்குக் காரணங்கள் நம்மிடையேயுள்ள சாதிப் பிரிவுகள், சமூகக் கொடுமைகள், அன்பில்லாத மதம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், பெண்ணடிமைத்தனம்’ இத்தனையும் ஒருங்கே பேசும் புதினம் இது. 1926 ஆம் ஆண்டு இப்புதினம் வெளியாகி முதல் ...

முட்டாளும் முற்றாளும்

படம்
  கட்டுரை ( ஏப்ரல் 1 தினக் கட்டுரை )        அறிவியலின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று நைட்ரஸ் ஆக்ஸைடு. சிரிப்பூட்டும் வாயு அது. அப்படியென்றால் கோபமூட்டுவதற்கென்று ஒரு வாயு இருக்க வேண்டுமே? வேண்டியதில்லை, அதற்குத்தான் வாய் இருக்கிறதே! சிலர் பேசத் தெரியாமல் பேசி கோபத்தை மூட்டுவர். கோபமே வராத நபரிடம், உனக்கு அறிவு இருக்கிறதா என்றோ அல்லது நீயொரு முட்டாள் என்று சொன்னால் போதும்? சொன்னவர் பாடு அவ்வளவேதான்! முட்டாள் என்கிற சொல் இன்று மன்னர், அரசியல், குடியரசு   என்கிற சொல்லிற்கு அடுத்ததாக அதிகம் உச்சரிக்கப்படும் சொல்லாக இருக்கிறது. அதற்காக ஒரு தினம் கொண்டாடுமளவிற்கு அந்த சொல் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. .            முட்டாள் ஒரு தமிழ்ச்சொல் . சிலையை அல்லது இராணியைப் பல்லக்கில் வைத்துத் தூக்கி வருகிறவர்கள் , பல்லக்கைக் கீழே இறக்காமல் இளைப்பாறுவதற்காக   இருபுறமும் ஒரு மரத்தால் முட்டுக் கொடுப்பார்கள் . அவர்களுக்கு அந்த ஒரு வேலையைத் தவிர வேறு வேலை தெரியாது . இவர்கள் முட்டு + ஆள் – முட்டாள். “அட...