இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முட்டாளும் முற்றாளும்

படம்
  கட்டுரை ( ஏப்ரல் 1 தினக் கட்டுரை )        அறிவியலின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று நைட்ரஸ் ஆக்ஸைடு. சிரிப்பூட்டும் வாயு அது. அப்படியென்றால் கோபமூட்டுவதற்கென்று ஒரு வாயு இருக்க வேண்டுமே? வேண்டியதில்லை, அதற்குத்தான் வாய் இருக்கிறதே! சிலர் பேசத் தெரியாமல் பேசி கோபத்தை மூட்டுவர். கோபமே வராத நபரிடம், உனக்கு அறிவு இருக்கிறதா என்றோ அல்லது நீயொரு முட்டாள் என்று சொன்னால் போதும்? சொன்னவர் பாடு அவ்வளவேதான்! முட்டாள் என்கிற சொல் இன்று மன்னர், அரசியல், குடியரசு   என்கிற சொல்லிற்கு அடுத்ததாக அதிகம் உச்சரிக்கப்படும் சொல்லாக இருக்கிறது. அதற்காக ஒரு தினம் கொண்டாடுமளவிற்கு அந்த சொல் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. .            முட்டாள் ஒரு தமிழ்ச்சொல் . சிலையை அல்லது இராணியைப் பல்லக்கில் வைத்துத் தூக்கி வருகிறவர்கள் , பல்லக்கைக் கீழே இறக்காமல் இளைப்பாறுவதற்காக   இருபுறமும் ஒரு மரத்தால் முட்டுக் கொடுப்பார்கள் . அவர்களுக்கு அந்த ஒரு வேலையைத் தவிர வேறு வேலை தெரியாது . இவர்கள் முட்டு + ஆள் – முட்டாள். “அட...

பாரினில் கொடியது!

  ஏப்ரல் 13 - ஜாலியன் வாலாபாக் படுகொலை நாள் . கிரேக்க நாட் டை சீசர் என்றொரு மன்னன் ஆண்டு வந்தான். அவன், குற்றவாளிகளுக்கு நிறைவேற்றும் மரணத் தண்டனையைப் பொது மக்கள் பார்த்து ரசிக்க ஒலிம்பியா கிராமத்தில் மைதானத்துடன் கூடிய ஓர் அரங்கம் அமைத்தான் . நீண்ட காலம் மரண தண்டனை நிறைவேற்றுமிடமாக இருந்த அந்த அரங்கம், ஒரு காலத்திற்குப் பிறகு சிறந்த பொழுதுபோக்கு  விளையாட்டு போட்டிகள் நடத்தும் ஒலிம்பிக் மைதானமாகிப் போனது . பஞ்சாப், அமிர்தசரஸ் நகரில் பண்டிதர் ஜாலியன்வாலா என்னும் ஒரு செல்வந்தர் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக, ஒரு தோட்டம் அமைத்தார் . அந்தப் பூங்கா ஒரு காலத்திற்குப் பிறகு, கொடுங்கோள் ஆட்சியாளர்களால், பொதுமக்களைக் கொன்று குவிக்கும் கொலைக் களமானது. நாம் ஒன்றை எழுதுகிறோம், வரலாறு ஒன்றை எழுதிக் கொள்கிறது! ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் தவிர்த்துவிட்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தை எழுதிவிட முடியாது. சுதந்திரப் போராட்டத்திற்காக பஞ்சாப் கொடுத்த உயிரின் விலை மிக அதிகம்.   அச்சம்பவம் நடந்தேறிய நூறாவது ஆண்டு நினைவு நாளில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஜாலியன் வாலாப...