இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலங்கிய நதியும் கலங்கா நொதியும்

படம்
கலங்கிய நதி - நாவல் மீதான விமர்சனப் பார்வை கற்பனை -1 தேச பிரதமர் - தீவிரவாதி, நக்சலைடு அல்லது அவரது கட்சிக்காரர்களால் கடத்தப்படுகிறார் என வைத்துக்கொள்வோம். என்ன நடக்கும்...?. பிரதமர் நாற்காலியில் மற்றொரு பிரதமர் உட்காரும் வரை தேடுதல் பணி கிஞ்சிற்றும் தொடங்கியிருக்காது. புதியப் பிரதமர் நாற்காலியில் அமர்ந்ததன் பிறகு காணாமல் போனவர் திரும்பி வந்தால், அவரது பதவி என்னாகுமென்று கணிப்பின் அடிப்படையிலேயே அவர் தேடுதல் பணியை முடுக்குவார். அதற்குள்ளாக, ஒரு சராசரி குடிமகன் இந்த உலகை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருப்பான். கற்பனை - 2 மத்திய அரசு நிறுவனத்தின் கீழ் உயர்ப்பதவியில் வீற்றிருக்கும் நான் திடீரெனக் கடத்தப்படுகிறேன். என்ன நடக்கும்...? தேடுதல் பணியைத் தொடங்குவதற்கு முன்பாக என்  காலி பணியிடத்திற்காக ஒருவரைத் தேர்வு செய்யும் படலம் நடந்தேறும். என்னை ஆள் வைத்து கடத்தியவர் என் இருக்கையில் வந்தமர்ந்திருப்பார். அவர் பதவி ஓய்வுப் பெற்றதற்குப் பிறகே நான் உயிராகவோ, பிணமாகவோ மீட்கப் பட்டிருப்பேன். சமீபத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின்  ஆதாரங்களை வெளியிட்ட முகிலன் காணாமல் போ...

வரைவு தேசிய கல்விக் கொள்கை - 2019 மீதான ஒரு பார்வை

படம்
வளரும் இந்தியா, சக்தி இந்தியா, வல்லரசு இந்தியா.. டிஜிட்டல் இந்தியா என்பது இன்றைய இந்தியாவின் அடையாளங்களாக இருக்கின்றன. கல்விக்காக, மேற்படிப்பிற்காக இந்தியாவிலிருந்து மேனாடு செல்லும் காலம் போய் கல்விக்காக இந்தியாவிற்குள் கால் பதிக்கும் நிலையை நோக்கி இந்தியா முன்னேறியுள்ளதாக புதிய கல்விக் கொள்கையை வரையறுத்திற்கும் கல்வியாளர்கள் கருதியிருக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே புதிய தேசிய கல்விக் கொள்கையின் கலைத்திட்டமும் கொள்கை முடிவும் இருப்பதை முன்வரைவாக வைத்திருக்கும் இயல்களைப் பார்க்கையில் கருத வேண்டியதாக இருக்கிறது. NEP-2019 மொத்தமுள்ள பதினெட்டு இயலில் இயல் -நான்கிலுள்ள பள்ளிக் கலைத்திட்டமும் ஆசிரியமும் என்கிற பகுதி மாணவர்களின் வயது, நரம்பு, மூளை, உணர்வு, உளவியலுடன் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. இந்த இயலை பெற்றோர் வரைக்குமாகக் கொண்டுச் சென்று விவாதித்தல், விவாதத்தின் அடிப்படையில் சில வரைவுகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை விருப்பு வெறுப்பின்றி ஏற்றல், எதிர்கால தலைமுறையைக் கருத்தில் கொண்டு திருத்தம் செய்தல் மூன்றும் வல்லரசு இந்தியாவை விடவும் நல்லரசு இந்தியாவை உருவாக்க வழிகோலும். ஒலி...