புகழ் என்ன செய்யும்?
புகழுக்காகவா எழுதுகி றேன் ? @அண்டனூர் சுரா நானும் அவரும் ஒரு காலக்கட்டத்தில் எழுதத் தொடங்கினோம். அவர் இரண்டு நூல்களோடு எழுதுவதை நிறுத்திக்கொண்டார். மொழி அடர்த்தியாக எழுதக்கூடியவர். சமீபத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு நேரிட்டது. அவரிடம் கேட்டேன், "அன்பரே, நன்றாகத்தானே எழுதிக்கொண்டிருந்தீர்கள். நீங்கள் எழுதிய நூல்களின் மூலமாக அறியப்பட்டீர்கள். ஏன் எழுதுவதை நிறுத்திக்கொண்டீர்கள்?” அவர் அமைதியாக இருந்துவிட்டு சொன்னார். "நிறுத்திவிட்டேன். நீங்கள் தொடர்ந்து எழுதுகிறீர்கள். புகழுக்காக எழுதுகிறீர்கள் " என்றார். அவரது பதில் எனக்கு வியப்பளித்தது. "ஓர் எழுத்தாளன் எழுதுவது புகழுக்காகவா? புகழ் என்ன கிரீடமா, இல்லை உயிரைக் காக்கும் கவசமா?" அவரிடம் கேட்டேன். அவர் முகத்தை எங்கேயோ வைத்துக்கொண்டு, "ஆமாம், பிறகு எதற்கு நீங்கள் எழுதுகிறீர்கள்?" என்று கேட்டார். நான் ஏன் எழுதுகிறேன் என்பதை விடவும் புகழின் ஆபத்து குறித்து அவருக்குப் புரியவைக்க நினைத்தேன். "புகழ் கழுதைப்புலிக்கு ஒப்பானது தெரியுமா?" கேட்டேன். "எப்படி?" என்றார். "திருவிவி...