கலங்கிய நதியும் கலங்கா நொதியும்
கலங்கிய நதி - நாவல் மீதான விமர்சனப் பார்வை கற்பனை -1 தேச பிரதமர் - தீவிரவாதி, நக்சலைடு அல்லது அவரது கட்சிக்காரர்களால் கடத்தப்படுகிறார் என வைத்துக்கொள்வோம். என்ன நடக்கும்...?. பிரதமர் நாற்காலியில் மற்றொரு பிரதமர் உட்காரும் வரை தேடுதல் பணி கிஞ்சிற்றும் தொடங்கியிருக்காது. புதியப் பிரதமர் நாற்காலியில் அமர்ந்ததன் பிறகு காணாமல் போனவர் திரும்பி வந்தால், அவரது பதவி என்னாகுமென்று கணிப்பின் அடிப்படையிலேயே அவர் தேடுதல் பணியை முடுக்குவார். அதற்குள்ளாக, ஒரு சராசரி குடிமகன் இந்த உலகை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருப்பான். கற்பனை - 2 மத்திய அரசு நிறுவனத்தின் கீழ் உயர்ப்பதவியில் வீற்றிருக்கும் நான் திடீரெனக் கடத்தப்படுகிறேன். என்ன நடக்கும்...? தேடுதல் பணியைத் தொடங்குவதற்கு முன்பாக என் காலி பணியிடத்திற்காக ஒருவரைத் தேர்வு செய்யும் படலம் நடந்தேறும். என்னை ஆள் வைத்து கடத்தியவர் என் இருக்கையில் வந்தமர்ந்திருப்பார். அவர் பதவி ஓய்வுப் பெற்றதற்குப் பிறகே நான் உயிராகவோ, பிணமாகவோ மீட்கப் பட்டிருப்பேன். சமீபத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் ஆதாரங்களை வெளியிட்ட முகிலன் காணாமல் போ...